Monday, January 31, 2011

தாமிரபரணி சஹஸ்ர நாமாவளி

தாமிரபரணி சஹஸ்ர நாமாவளியை தினசரி படித்தால் சகல  தோஷங்களும் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்.

வ்யதிபாதம் யோகம்

ஒவ்வொரு மாதமும் ராதா நட்சத்திரத்தில் ஸ்ரீ தாமிரபரணி சஹஸ்ரநாம பூஜை செய்வது சகல பாவங்களையும் போக்கும். தாமிரபரணியில் முக்கிய தீர்த்த கட்டம் சேரன் மகாதேவி என்ற ஊரில் உள்ளது.திருநெல்வேலியில் இருந்து சுமார் இருபத்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பஞ்சாங்கத்தில் இருபத்து ஏழு யோகங்கள் உள்ளது. இதில் வ்யதிபாதம் என்ற யோகம் முக்கியமானது. ஒருவருடைய ஜாதகத்தில் விதிபாத யோகத்தில் ஜெனித்ததாக இருந்தால் இந்த ஷேத்திரத்தில் தாமிரபரணியில் நீராடி நதி கரையில் உள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாளை வணங்கி சேரன் மகாதேவி ஊரினுள் உள்ள சிவனுக்கு அர்ச்சனை செய்து அன்னதானம் செய்யவேண்டும்.

ஜெய் தாமிரபரணி

ஜெய் தாமிரபரணி என்று தினமும் நுற்றிஎட்டு முறை கூறினால் சகல நன்மையையும் உண்டாகும், நதிகள் உத்திரவாகிணியாக செல்வதும் அப்படி பட்ட இடத்தில நதியின் மேற்கரையில் உள்ள சிவாலயங்களும் விசேஷமானவை.தாமிரபரணி நதிக்கரையில் மந்திர பூர்வமாக ஸ்நானம் செய்ய வேண்டிய நூற்றிநாற்பத்து ஒன்பது தீர்த்த கட்டங்கள் உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீ தாமிரபரணியின் மகத்துவத்தை பற்றி செவியினால் கேட்பவர்கள், படிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த புண்ணிய பலன் அடைவார்கள்.

தாமிரபரணி புஷ்கரம்

நதியினுடைய பெருமையை தெரிந்து கொள்வதும்,அதைப்பற்றி மற்றவர்களுக்கு கூறுவதும் பெருமையாகும்.தீர்த்த யாத்திரை செய்வது மனிதனுடைய கடமை. நதிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்வத்துபோல பல நல்ல தலை சிறந்த தலைவர்களையும்,ஞானிகளையும் கலைங்கர்களையும்,கவிஞர்களையும் உருவாக்கி இருகின்றது.
இத்தகைய நதிகளில் மிகவும் சிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணி நதியாகும். கும்ப மேளாவைப்போல, மாமாங் கத்தை போலவும், தாமிரபரணி புஷ்கரம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் விருச்சக ராசியில் பிரவேசிக்கும்
காலம் தாமிரபரணி புஷ்கரம் கொண்டாட படவேண்டும்.ஸ்ரீ தாமிரபரணி உபாசனை பிரம்மஹத்தி தோஷத்தையும் பித்ரு சாபத்தையும், சுமங்கலி சாபத்தையும் விலக வழி செய்கிறது. 

Sunday, January 30, 2011

தாமிரபரணி மகத்துவம்

                                             தாமிரபரணி மகத்துவம்


நதி என்றால் மேற்கே தோன்றி கிழக்கே கடலில் சேர வேண்டும். நதிக்கரையில்தான் மாபெரும் தேசங்களும், நாகரீகங்களும்,ஏற்பட்டுஇருகின்றன. நதிக்கரையில் எராளமான கோவில்கள் நிர்மானிக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீ வால்மீகி முனிவர் தமசநதிக்கு செல்லும் போது உருவானதுதான் தலை சிறந்த காவியமான ராமாயணம்.
 தான் சுத்தமாகி அசுத்தமானவைகளை சுத்தமாக்குவதே நீராகும். சுத்தம் புண்ணியத்தை தரும். அந்த புண்ணியத்தை அளக்கும் அளவுகோலை கிருச்சரம் என்று கூறுவார்கள். பத்தாயிரம் காயத்திரி ஜெபித்தால் அது ஒரு கிருச்சர பலனை தரும். வேதபாராயணம்,கோ தானம் பிராமணபோஜனம்  போன்றவை இன்ன கிருச்சர பலனை தரும் என்று அளவிட்டு தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
அதேபோல் சமுத்திரஸநானமான   ராமேஸ்வரம, மகாநதி ஸ்நாணம் பல மடங்கு கிருச்ச பலனைத் தரும்.

தர்ப்பணம்

தர்ப்பணம் என்பது நம் முன்னோர்களுக்கு நம் நன்றியை காணிக்கையாக கொடுத்தலாகும்.நாம் வாழும் இந்த உடல் நம் முன்னோர்களின் அணுதான்.நம்முடைய பின்னோக்கில் எழு தலைமுறையினர் நமது உடல் உபாதை,திருமணத் தடை,இல்வாழ்வில் சிக்கல், மற்றும் உள்ள நம் துன்பங்களை நீக்க வலு பெற்றவர்கள் . அவர்களுக்குரிய பித்ரு பூஜைகளை நாம் முறையாக செய்வதன் மூலம் நாம் நம் வாழ்க்கையில் வெற்றி  பெறலாம் .வருஷா வருஷம் தர்ப்பணம் செய்வது மட்டும் போதாது. அனைவரும் திலஹோமம் தம்முடைய வாழ்நாளில் ஒருமுறையேனும் திலஹோமம் செய்வது அவசியம்.  திலஹோமத்தை செய்ய ஜென்ம நட்சத்திரம்,ஏகாதசி திதி, சனிகிழமை ஏற்ற நாட்கள் .குடும்பத்தில் எதாவது துர்மரணம் நடந்திருக்குமேயானால் நிச்சயமாக திலஹோமம் செய்யவேண்டும்.

Sunday, January 23, 2011

திருமணத்தடை

திருமணத்தடை நீங்கி நல்ல மணவாழ்க்கை அமைய ஆண்டாள் பாசுரத்தில் உள்ள வாரணமாயிரம் பாடலை நாற்பத்தெட்டு நாட்கள் வீட்டில் தீபம் ஏற்றி படித்தால் நல்ல வரன் அமையும்  

பித்ரு தோஷம்

ஜாதகங்களை ஆராயும்போது முதலில் பித்ரு தோஷம் உள்ளதா என்று பார்க்க வேண்டும் .
அதிலும் துர்மரணம் ஆனவர்களின் தோஷம் மிகவும் கொடியது. பித்ரு தோஷம், பித்ரு
சாபம்,பித்ரு தாகம் ஆகியவற்றை ஆராய்ந்து சரியான முறையில் திலஹோமம் செய்து
பித்ருக்களை கரையேற்ற வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு  ஆண்வாரிசு இருந்தால், முத்தவர் மட்டுமே தர்ப்பணம் போன்ற முன்னோருக்கான பிதுர் காரியங்களை செய்ய வேண்டும் என்று இருக்கின்றனர். இது தவறாகும் . இந்த ௫ ஆண் வாரிசும் தாயின் கர்ப்பத்தில் 10 மாதம் தனி தனியாக இருந்து உள்ளார்கள். இந்த குடும்பத்தில் சுமார் 10 லட்சம் மதிப்புடைய சொத்து இருந்தால் அதை மூத்தவருக்கு மட்டுமே கொடுத்துவிடுவார்களா? அந்த சொத்தில் தமக்கு உரிய பங்கை வாங்கிவிடுவார்கள்.அதே போல கர்மாவையும் தன்னுடைய பங்கை செய்யவேண்டும்.தர்ப்பணம் என்பது நம் முன்னோர்களுக்கு நம் நன்றியை காணிக்கையாக கொடுத்தலாகும். அகத்தியர்,வசிஷ்டர் போன்ற மாமுனிவர்கள் கூட தங்கள் முன்னோர்களை தர்ப்பணம் என்ற பித்ரு பூஜை முறைல்யில் வணங்கி பலன் பெற்று உள்ளனர்.