Sunday, January 30, 2011

தாமிரபரணி மகத்துவம்

                                             தாமிரபரணி மகத்துவம்


நதி என்றால் மேற்கே தோன்றி கிழக்கே கடலில் சேர வேண்டும். நதிக்கரையில்தான் மாபெரும் தேசங்களும், நாகரீகங்களும்,ஏற்பட்டுஇருகின்றன. நதிக்கரையில் எராளமான கோவில்கள் நிர்மானிக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீ வால்மீகி முனிவர் தமசநதிக்கு செல்லும் போது உருவானதுதான் தலை சிறந்த காவியமான ராமாயணம்.
 தான் சுத்தமாகி அசுத்தமானவைகளை சுத்தமாக்குவதே நீராகும். சுத்தம் புண்ணியத்தை தரும். அந்த புண்ணியத்தை அளக்கும் அளவுகோலை கிருச்சரம் என்று கூறுவார்கள். பத்தாயிரம் காயத்திரி ஜெபித்தால் அது ஒரு கிருச்சர பலனை தரும். வேதபாராயணம்,கோ தானம் பிராமணபோஜனம்  போன்றவை இன்ன கிருச்சர பலனை தரும் என்று அளவிட்டு தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
அதேபோல் சமுத்திரஸநானமான   ராமேஸ்வரம, மகாநதி ஸ்நாணம் பல மடங்கு கிருச்ச பலனைத் தரும்.

தர்ப்பணம்

தர்ப்பணம் என்பது நம் முன்னோர்களுக்கு நம் நன்றியை காணிக்கையாக கொடுத்தலாகும்.நாம் வாழும் இந்த உடல் நம் முன்னோர்களின் அணுதான்.நம்முடைய பின்னோக்கில் எழு தலைமுறையினர் நமது உடல் உபாதை,திருமணத் தடை,இல்வாழ்வில் சிக்கல், மற்றும் உள்ள நம் துன்பங்களை நீக்க வலு பெற்றவர்கள் . அவர்களுக்குரிய பித்ரு பூஜைகளை நாம் முறையாக செய்வதன் மூலம் நாம் நம் வாழ்க்கையில் வெற்றி  பெறலாம் .வருஷா வருஷம் தர்ப்பணம் செய்வது மட்டும் போதாது. அனைவரும் திலஹோமம் தம்முடைய வாழ்நாளில் ஒருமுறையேனும் திலஹோமம் செய்வது அவசியம்.  திலஹோமத்தை செய்ய ஜென்ம நட்சத்திரம்,ஏகாதசி திதி, சனிகிழமை ஏற்ற நாட்கள் .குடும்பத்தில் எதாவது துர்மரணம் நடந்திருக்குமேயானால் நிச்சயமாக திலஹோமம் செய்யவேண்டும்.