Monday, January 31, 2011

தாமிரபரணி சஹஸ்ர நாமாவளி

தாமிரபரணி சஹஸ்ர நாமாவளியை தினசரி படித்தால் சகல  தோஷங்களும் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்.

வ்யதிபாதம் யோகம்

ஒவ்வொரு மாதமும் ராதா நட்சத்திரத்தில் ஸ்ரீ தாமிரபரணி சஹஸ்ரநாம பூஜை செய்வது சகல பாவங்களையும் போக்கும். தாமிரபரணியில் முக்கிய தீர்த்த கட்டம் சேரன் மகாதேவி என்ற ஊரில் உள்ளது.திருநெல்வேலியில் இருந்து சுமார் இருபத்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பஞ்சாங்கத்தில் இருபத்து ஏழு யோகங்கள் உள்ளது. இதில் வ்யதிபாதம் என்ற யோகம் முக்கியமானது. ஒருவருடைய ஜாதகத்தில் விதிபாத யோகத்தில் ஜெனித்ததாக இருந்தால் இந்த ஷேத்திரத்தில் தாமிரபரணியில் நீராடி நதி கரையில் உள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாளை வணங்கி சேரன் மகாதேவி ஊரினுள் உள்ள சிவனுக்கு அர்ச்சனை செய்து அன்னதானம் செய்யவேண்டும்.

ஜெய் தாமிரபரணி

ஜெய் தாமிரபரணி என்று தினமும் நுற்றிஎட்டு முறை கூறினால் சகல நன்மையையும் உண்டாகும், நதிகள் உத்திரவாகிணியாக செல்வதும் அப்படி பட்ட இடத்தில நதியின் மேற்கரையில் உள்ள சிவாலயங்களும் விசேஷமானவை.தாமிரபரணி நதிக்கரையில் மந்திர பூர்வமாக ஸ்நானம் செய்ய வேண்டிய நூற்றிநாற்பத்து ஒன்பது தீர்த்த கட்டங்கள் உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீ தாமிரபரணியின் மகத்துவத்தை பற்றி செவியினால் கேட்பவர்கள், படிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த புண்ணிய பலன் அடைவார்கள்.

தாமிரபரணி புஷ்கரம்

நதியினுடைய பெருமையை தெரிந்து கொள்வதும்,அதைப்பற்றி மற்றவர்களுக்கு கூறுவதும் பெருமையாகும்.தீர்த்த யாத்திரை செய்வது மனிதனுடைய கடமை. நதிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்வத்துபோல பல நல்ல தலை சிறந்த தலைவர்களையும்,ஞானிகளையும் கலைங்கர்களையும்,கவிஞர்களையும் உருவாக்கி இருகின்றது.
இத்தகைய நதிகளில் மிகவும் சிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணி நதியாகும். கும்ப மேளாவைப்போல, மாமாங் கத்தை போலவும், தாமிரபரணி புஷ்கரம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் விருச்சக ராசியில் பிரவேசிக்கும்
காலம் தாமிரபரணி புஷ்கரம் கொண்டாட படவேண்டும்.ஸ்ரீ தாமிரபரணி உபாசனை பிரம்மஹத்தி தோஷத்தையும் பித்ரு சாபத்தையும், சுமங்கலி சாபத்தையும் விலக வழி செய்கிறது.